எம்மில் பலரும் பயணத்தின் போது பல தருணங்களில் பொது கழிவறையைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் நேரிடும். 

குறிப்பாக புகையிரத நிலையம், பஸ் நிலையம், படமாளிகை, பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் இருக்கும் கழிவறையைப் பயன்படுத்தும் முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

குறித்த கழிவறையை நாம் அவசரத்திற்காக பயன்படுத்துகிறோம். ஆனால் எம்மையும் அறியாமல் அந்த சிறிய நேரத்திற்குள் நாம் கிருமித் தொற்றுக்குள்ளாகி இருப்போம். பொது கழிவறையைப் பயன்படுத்த நேரிட்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

முதலில் கதவுகளின் கைப்பிடிகளை உங்களின் கைகளால் திறக்காதீர்கள். உங்களுடைய பைகளில் தயாராக வைத்திருக்கும் டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி கதவை திறக்கவேண்டும். இதை மறந்து கைகளால் திறந்து உள்ளேச் சென்றுவிட்டால் முதலில் உங்களது கைகளை தண்ணீரால் கழுவுங்கள்.

அதே போல் இயற்கை உபாதைகளை கழித்த பின் உடனே அதனை சுத்தம் செய்யாமல் நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை சீராக்கிக் கொண்ட பின்னர் அந்த கழிவறையின் மூடியை மூடிவிட்டு சுத்தப்படுத்தவேண்டும். அப்போது தான் கிருமிகளின் தொற்று அடுத்தவர்களை பாதிக்காமல் இருக்கும்.

அதே போல் உங்களுக்கு முன்னர் வேறொருவர் சென்றுவிட்டு திரும்பினால் நீங்கள் உடனடியாக அந்த கழிவறைக்குள் நுழையாதீர்கள். 

20 விநாடிகள் இடைவெளி பிறகு உள்ளே நுழையவேண்டும். ஏனெனில் உமக்கு முன்னர் சென்றவர்களிடமிருந்த பக்டீரியாக்கள் காற்றில் பரவும் தன்மையைக் கொண்டிருந்தால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். அதனால்  முன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

பெண்களாக இருந்தால் எப்போதும் கைகளில் சானிடைஸர்களை கைவசம் வைத்திருக்கவேண்டும். இதனை கழிவறையை பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் இதனை முதலில் பயன்படுத்தவேண்டும்.