ஐயாத்துரை நடேசனின் 14வது ஆண்டு நினைவுதினம்

Published By: Digital Desk 4

30 May, 2018 | 02:35 PM
image

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளபோதிலும் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில் உண்மையான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

நாளை 31ஆம் திகதி பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த நினைவு தின நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தினை இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47