மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கான விளக்கமறியில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளரான கீத்நோயரை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இந் நிலையில் கல்கிஸ்ஸை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 13 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.