கார்த்தி நடிக்க உள்ள திரைப்படத்தின் தலைப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி, பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற பெயரிலான படத்தில் நடித்தார். அப்படத்தின் பணிகள் முடிவடைந்ததும், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தபடி அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கரின் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்  நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்க உள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதனை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

இந்த படத்தில் முதலில் பெயரிடப்படவில்லை. தற்போது இதற்கு தேவ் என்று இரண்டெழுத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கார்த்தியின் ரசிகர் ஒருவர், ஏற்கெனவே பையா என்ற இரண்டெழுத்து படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். அந்த படத்தின் வெற்றியைப் போல இந்த படமும் வெற்றிப் பெறும்.’ என்றார்.

இதனிடையே இந்த படமும் பயணத்தை மையமாகக் கொண்ட எக்சன் திரில்லர் படம் என்று படக்குழுவினர் சொல்லிவருவது குறிப்பிடத்தக்கது.