இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திலகரட்ண டில்சான் நடிகாரகியுள்ளார்.

அவர் தற்போது தொலைக்காட்சி நாடகமொன்றில் நடித்து வருகின்றார்.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகவும் அதிரடியாக ஓட்டங்களை குவிப்பதிலும் வல்லவராகவும் திகழ்ந்த டில்ஷான் இலங்கை அணியில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவர் அரசியலுக்குள் பிரவேசிப்பார் என பலராலும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் டில்ஷான் “மிது” எனும்  தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிகராக பத்திரமேற்று நடித்துள்ளார்.

87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள திலகரட்ண டில்ஷான் 5,492 ஓட்டங்களையும் 330 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10, 290 ஓட்டங்களையும்  80 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி 1,889 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென்ற பாணியில் அடித்து விளையாடும் “டில்ஷ்கூப்” என்ற துடுப்பெடுத்தாடும் பாணியை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.