எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அவ் அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் இடம்பெறவுள்ள முதலாவது போட்டியை பகலிரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் 'கெபா' விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது போட்டி பெப்ரவரி முதலாம் திகதி முதல் 'மனுகா ஓவல்' மைதானத்தில் இடம்பெறவுள்ளது.