(இரோஷா வேலு) 

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து வல்லப்பட்டைகள் ஒரு தொகையுடன் இந்திய பிரஜை இருவர் நேற்று பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலனி புளத்சிங்கள மாவத்தையில் வைத்து வல்லப்பட்டைகள் ஒரு தொகையுடன் இந்திய பிரஜை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 698 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த இருவரையும் நேற்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.