சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி ரயில்வே தொழில்நுட்ப சேவை தொழிற்சங்க ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பால் மலையக புகையிரத சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று 29 ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்தனர். எனினும் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் எதுவும் இதனால் இரத்து செய்யப்படவில்லை. 

இருப்பினும் நேற்று மாலை வழமையாக வரும் புகையிரதங்களும் கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதங்களும் வழமையான நேரத்தைவிட சுமார் மூன்று மணித்தியாலங்கள் காலம் தாழ்த்தி வந்ததால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.