நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் அம்பாந்தோட்டை, ஹக்மீமன, தங்காலை, பெலியத்த, வலஸ்முல்ல மற்றும் சூரியவெல்ல ஆகிய பகுதிகளுக்கான மின்சார விநியோகமே இவ்வாறு தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

சீரற்றகாலநிலை காரணமாக குறித்த பகுதியிலுள்ள மின்கம்பத்தின் மேல் மரம்  முறிந்து விழுந்த காரணத்தினால் அப் பகுதிகளுக்கு தொடர்ந்தும் மின்சாரம் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளதாகவும் மின்சார சபையினர் மேலும் தெரிவித்தனர்.