அஞ்சல், தொலை தொடர் ஊழியர்கள் பணி பகிர்ஷ்கரிப்பில் 

Published By: Daya

30 May, 2018 | 12:22 PM
image

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர் ஊழியர்கள்  இரு நாள் பணி பகிர்ஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். 

ஜுன் மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் இரு நாட்கள் நாடு தழுவிய ரீதியில்  தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப்போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

 சங்கம் வெளியிட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டப் கோரிக்கைகளில்,

12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு, 5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய், கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய், ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு, 2012 பொறுப்புப் பரீட்சையைநடைமுறைப்படுத்து, பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்கு, விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு, பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என். 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பு ஜூன் 12ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55