(எஸ்.ஜே.பிரசாத்)

இலங்கை கால்­பந்­தாட்ட வர­லாற்றில் முதன்­மு­றையாக நடத்­தப்­படும் வடக்கு – கிழக்கு பிரீ­மியர் லீக் கால்­பந்­தாட்டத் தொடர் இன்று கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்கை உள்ளூர் விளை­யாட்டுப் போட்­டி­களில் முதல் தட­வை­யாக அதி­கூ­டிய பணப்­ப­ரிசை வழங்­க­வுள்ள வடக்கு – கிழக்கு பிரீ­மியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்டி யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் இன்று மாலை பிர­மாண்­ட­மான ஆரம்ப விழா­வுடன் தொடங்­க­வுள்­ளது.

இப் போட்­டியில் வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள 12 அணிகள் பங்­கு­பற்­ற­வுள்­ளன. 

வடக்கு மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம், மன்னார், வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கால்­பந்­தாட்டக் கழ­கங்கள் பங்­கு­பற்­று­கின்­றன.

இன்று ஆரம்­ப­மாகும் தொடரின் முதல் போட்­டியில் கிளியூர் கிங்ஸ் மற்றும் ட்ரிங்கோ டைட்டன்ஸ் ஆகிய கழக அணிகள் மோது­கின்­றன. 

இத் தொடரைப் பொறுத்­த­வ­ரையில் இதில் விளை­யாடும் ஒவ்­வொரு அணிக்கும் ஒவ்­வொரு உரி­மை­யாளர் இருப்பார்.

ஒவ்­வொரு அணியும் பிற மாவட்ட வீரர்­களை அணியில் இணைத் துக்­கொள்­ளலாம். வெளிநாட்டு வீரர்­களும் இத் தொடரில் விளை­யா­டு­கின்­றனர். 

ஆனால் போட்­டியின் போது அந்­தந்த மாவட்­டத்தைச் சேர்ந்த நால்­வரும் வடக்கு– கிழக்கைச் சேர்ந்த ஐவரும் குறைந்­த­பட்சம் இடம்­பெ­ற­வேண்டும். 

பிற­மா­வட்­டங்­களைச் சேர்ந்த இருவர் மாத்­தி­ரமே ஒரே நேரத்தில் விளை­யா­டலாம். 

அதன்­படி வடக்கு - கிழக்கு பிரீ­மியர் லீக் கால்பந்­தாட்டத் தொடரில் கிளியூர் கிங்ஸ், மாத்­தோட்டம் எவ்.சி., நோர்தன்ஸ் எலைட், வவு­னியா வோரியர்ஸ், முல்லை பீனிக்ஸ், அம்­பாறை எவஞ்சர்ஸ், ட்ரிங்கோ டைடன்ஸ், டில்கோ கொங்­கரர்ஸ், மன்னார் எவ்.சி., வல்வை எவ்.சி. மற்றும் மட்­டுநகர் சுப்பர் கிங்ஸ் ஆகிய அணி­களே மோதவுள்ளன.