ரஷ்யாவை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஒருவர், உக்ரைன் நாட்டு தலைநகரான கெய்வியில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல ஊடகவியலாளரான ஆர்கடி பாப்சென்கோ.என்பவர் ரஷ்யாவில் இருந்து தனது பாதுகாப்புக் கருதி உக்ரைன் நாட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்றிரவு அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து அவரது மனைவி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து.குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் அவர் வைத்தியவசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

ஊடகத்துறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.