பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மீது தியத்தலாவை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 24 வயது பெண்ணொருவர் பலத்த காயங்களிற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் சிக்கி மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.