மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடென்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. 

மன்னார் சாந்திபுரம் நூறு வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச் சம்பவம் நடக்கும் போது வீட்டில் எவரும் இல்லை எனவும் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தின் காரணமாக வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து தீக்கிரையானதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.