பாவனைக்குதவாத டின்மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

Published By: Daya

29 May, 2018 | 02:29 PM
image

(இரோஷா  வேலு) 

மனித பாவனைக்குதவாத உணவு பொருட்களை தாங்கி வந்த 74 கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் 18 கொள்கலன்கள் எதிர்வரும் தினங்களில் திருப்பியனுப்பப்படுமென சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். 

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களில் புழுக்கள் காணப்படுவதாகவும் அவற்றை சந்தைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் அவற்றின் உண்மைத் தன்மைக் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 

மனித பாவனைக்குதவாத உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 74 கொள்கலன் அடையாளங் காணப்பட்ட நிலையில் சுங்க கொள்கலன் தரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் தினங்களில் அவற்றில் 18 கொள்கலன்கள் திருப்பியனுப்பப்படவுள்ளது. 

ஒரு நாளைக்கு 100 க்கும் அதிகமான கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களுக்கு வருகின்றன. அவற்றில் உணவு பொருட்கள் தாங்கி வரும்  கொள்கலன்களை இலங்கை சுங்க பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் தரக் கட்டுப்பாட்டுக்குட்படுத்தும்.  

அவற்றை தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகளுக்குட்படுத்திய பின்னரே நுகர்வோருக்காக சந்தைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் சுங்க பிரிவினரால் மேற்கொள்ளப்படும். இதன்போது தரச் சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியாத கொள்கலன்கள் சுங்க பிரிவனரால் சீல் வைக்கப்படும். 

இவ்வாறு அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 74 கொள்கலன்கள் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் மனித பாவனைக்குதவாத பொருட்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இறக்குமதி செய்வோர் பிரபல நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர். 

எனவே, இது குறித்த உள்ளக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாவனைக்குதவாத உணவு பொருட்களை திரும்பி அனுப்பல் மற்றும் அழித்தல் போன்ற நடவடிக்கைகளில் சுங்க பிரிவினர் ஈடுபட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01