ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த வைத்தியர் இன்று காலை கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது   பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட 

சோதணையின் போது 250 மில்லிகிராம் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது 

மீட்கப்பட்ட போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றில் முன்னிலை செய்யப்படவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.