மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற வேனை மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த வேன் சாரதி சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும், சம்பவ தினத்தன்று  மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய வேன் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் அப்பகுதி மக்களினால் வேனை துரத்தி பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.