பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய ஆறு கைதிகளுள் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

அந்த வகையில் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து கைதிகளை சிறைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த போதே குறித்த ஆறு கைதிகளும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களை கைது செய்ய நேற்று மாலையே சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்தனர். இந் நிலையில் இன்று காலை  தப்பிச் சென்ற கைதிகளுள் ஒருவரை எல்பிட்டிய, எலக்கந்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் ஏனைய ஐவரை தோடும் பணிகளில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.