ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டும் - மஹிந்த

Published By: Priyatharshan

29 May, 2018 | 10:18 AM
image

ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்து வருகின்ற னர். எனினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

நல்லாட்சியில் தொல்பொருள் தலங்கள் வகைதொகையின்றி அழிக்கப்டுகின்றன. விஜிதபுரவில் அண்மையில்ஒருதலம்  அழிக்கப்பட்டுள்ளது. இருபது வீடுகள் அமைப்பதற்கு பத்து ஏக்கர் பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. அம்பாறையிலுள்ள தொல்பொருள் பிரதேசங்கள்  பெருவாரியாக அழிக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு மதத்தினர் மேற்கொள்வதில்லை. தினந்தோறும் பெளத்தம் பற்றி பேசுவபர்களே இதனைச் செய்கின்றனர்.

இவ்வாறான நிலையில் நாட்டில் சுந்தரமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் மதத் தலங்களிலும் வரி அறவிடுவதற்கு எதிர்பார்க்கின்றனர். எனினும் தொல்பொருள் பிரதேசங்களும் சமயத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அது குறித்து அரசாங்கம் கவனயீனமாக உள்ளது.

2020 ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக் குறிப்பிட்டு வருகின்றனர். எனினும் அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம்.

ஏனெனில் நாட்டில் தற்போது முறையான ஆட்சி இல்லை. பாராளுமன்றிலும் விதிமுறைகள் பேணப்படுயவதாக இல்லை. பாராளுமனறில் 16 உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட்டுள்ளது. ஆறு உறுப்பினர்களைக்கொண்ட கட்சிக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றனர். மேலும் சில கட்சிகள் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை பொறுப்பேற்று முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04