படை­யினர் வச­முள்ள காணிகள் அனைத்­தையும் மக்களின் காணி­க­ளாயின் மக்­க­ளி­டமும் அர­சாங்க காணி­க­ளாயின் மாகாண காணி ஆணை­யா­ள­ரி­டமும் கைய­ளிக்­க­வேண்டும். அத்­துடன் கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­தி­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும். தூத்­துக்­குடி மன்னார் பட­குச்­சே­வையை மீண்டும் ஆரம்­பிப்­ப­துடன் பலாலி விமா­னத்­த­ளத்தை சர்­வ­தேச அல்­லது பிராந்­திய விமா­னத்­த­ள­மாக மாற்ற வேண்டும். 50 ஆயிரம் வீடு­க­ளையும் உட­ன­டி­யாக அமைக்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அவ­சர கோரிக்கை விடுத்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம கைய­ளித்­துள்ள கடி­தத்­தி­லேயே இந்தக் கோரிக்­கை­யினை அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வட­மா­கா­ணத்­துக்கு நேற்று முன்­தினம் விஜயம் மேற்­கொண்­ட­துடன் நேற்று கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்­திலும் யாழ். மாவட்ட செய­ல­கத்­திலும் அபி­வி­ருத்தி மீளாய்வு கூட்­டங்­க­ளையும் நடத்­தி­யி­ருந்தார். இந்தக் கூட்­டங்­களில் பங்­கேற்­கு­மாறு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. மாவட்ட அபி­வி­ருத்திக் குழுவின் இணைத் தலை­வ­ராக அவரும் அங்கம் வகித்து வரு­கின்றார்.

ஆனாலும் பிர­தமர் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டங்­களில் முத­ல­மைச்சர் பங்­கு­பற்­ற­வில்லை. இந்­த­நி­லையில் பிர­த­ம­ருக்கு தனது செய­லா­ள­ரூ­டாக அபி­வி­ருத்தி திட்­டங்­களை மீளாய்வு செய்­தலும் காணி­களை விடு­வித்­தலும் எனும் தலைப்பில் கடி­த­மொன்­றினை கைய­ளித்­துள்ளார். அந்தக் கடி­தத்தில் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­தினை உட­ன­டி­யாக நீக்­கு­வ­துடன் அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­விக்க வேண்­டு­மென்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  

அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

01. காணி விடு­வித்தல்

படை­யினர் வச­முள்ள காணிகள் அனைத்­தையும் மக்கள் காணிகள் ஆயின் மக்­க­ளி­டமும் அரச காணி­க­ளாகில் மாகாண காணி ஆணை­யா­ள­ரி­டமும் கைய­ளிக்­கப்­பட வேண்டும். 2013இல் இருந்து காணி­களை எம்­மிடம் ஒப்­ப­டை­யுங்கள் என்று கேட்டு வரு­கின்றோம். அரச காணிகள் மேல் எமக்­கி­ருக்கும் சட்ட உரித்து அர­சியல் யாப்பின் ஒன்­ப­தா­வது அட்­ட­வ­ணையின் முதலாம் நிரலின் கீழ் வரும் அனு­பந்தம் IIஇல் தரப்­பட்­டுள்­ளன.

பாது­காப்பு வேலை­களைப் பொலி­சா­ரிடம் கைய­ளிக்­கலாம். தேவை­யெனில் ஏதேனும் வேலை­களை படை­யினர் செய்ய வேண்டி வந்தால் அந்த குறிப்­பிட்ட சேவை­களை எமது மேற்­பார்­வையின் கீழ் அவர்கள் செய்­யலாம். அதற்­காகப் படை­யி­னரை உரிய அதி­கா­ரிகள் இங்கு அனுப்­பலாம். இன்று வரையில் நிலை­பெற்­றி­ருக்கும் ஒரு இரா­ணு­வ­மா­கவே போர் முடிந்த பின்­னரும் படை­யினர் இங்கு குடி­யி­ருந்து வரு­கின்­றனர். இப்­போது அவர்கள் தமது தந்­தி­ரோ­பா­யங்­களை மாற்றி மக்­க­ளுக்கு உதவி செய்ய முன்­வந்­துள்­ளனர். சோழியன் குடுமி சும்மா ஆடாது.

02. கட்­ட­மைப்­புக்­களின் அபி­வி­ருத்தி

1. (I) காங்­கே­சன்­துறைத் துறை­முக வேலைகள் எப்­போது ஆரம்­பிப்­பன?

         (II) தூத்­துக்­குடி - தலை­மன்னார் படகு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். தொடங்­கினால் புலம்­பெ­யர்ந்த எம் மக்கள் தமது உடை­மை­களை இங்கு கொண்­டு­வர முடியும்.

(III) பாக்­கு­நீ­ரி­ணையில் இருந்து வௌியேற்றி இழுவைப் பட­கு­களை வங்­காள விரி­குடா, அரே­பியன் கடல் போன்­ற­வற்­றிற்கு கொண்டு செல்ல இந்­திய அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும்.

2. பலாலி விமானத் தளத்தை சர்­வ­தேச அல்­லது பிராந்­திய விமானத் தள­மாக மாற்ற வேண்டும். மேல­திக மாகாண காணிகள் சுவீ­க­ரிக்கத் தேவை­யில்லை என்று இந்­திய அர­சாங்கம் கூறி­யுள்­ளது.  

3. மாகாண ஏரிகள், குளங்கள் என்­பன மறு சீர­மைக்­கப்­பட வேண்டும். அப்­போது நீர் மட்­டத்தின் மேல் சூரிய ஔிச் சட்­டங்­களை (Solar Power Panels) பரவி விடலாம். இது மின்­சா­ரத்தைத் தரு­வது மட்­டு­மல்­லாது குளத்து நீர் ஆவி­யாக மாறு­வதைத் தடுப்­ப­தா­கவும் அமையும்.

4. எமது கிரா­மத்தில் இருக்கும் மக்கள் அபி­வி­ருத்தி சங்­கங்­களின் கட்­ட­டிங்­களைப் புனர் நிர்­மா­ணிக்க வேண்டும். அவ்­வாறு சீர­மைப்­பதன் பின்னர் அங்கு கண­னிகள் போன்ற வச­திகள் செய்து கொடுக்­கப்­பட வேண்டும். இதற்­கான கோரிக்கை ஏற்­க­னவே இந்­திய உயர் ஸ்தானி­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.  

5. அரச மின்­நி­லைய இணைப்­புடன் சேர்க்கும் முக­மாக காற்­றாடி, சூரிய சக்தி போன்ற பதில் மின்­சார உற்­பத்தி முறை­களைக் கையாள வேண்டும்.

6. கொக்­கி­ளாயில் வடக்கு கிழக்கை இணைக்க பாலம் ஒன்று கட்­டப்­பட வேண்டும்.

03.  வீட­மைப்பும் மீள் குடி­யி­ருத்­தலும்  

வட­மா­காண சபை மூலம் 50000 வீடுகள் கட்­டித்­தர வேண்டும். ஆனால் அர­சாங்கம் எம்மை நம்­பு­வ­தில்லை. வீட­மைப்­புக்­கான செலவு பணம் அனைத்­தையும் அர­சாங்க அதி­பர்­க­ளுக்கே கொடுத்து வரு­கின்­றீர்கள். அவர்கள் எமது அலு­வ­லர்­களைக் கொண்டே வேலை­களைச் செய்து முடிக்­கின்­றார்கள். இப் பணத்தை நேர­டி­யாக எமக்கு அனுப்­புதில் என்ன தயக்கம்? மக்­களால் தேர்ந்­தெ­டுக்கும் பிர­தி­நி­திகள் மீது நீங்கள் நம்­பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் மீது உங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை.  

கேப்­பாப்­பி­லவு போன்ற இடங்கள் இன்­னமும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. உடனே அவை விடு­விக்­கப்­பட வேண்டும். அதை விட்டு காணி­களைத் தம் கைவசம் வைத்­தி­ருக்க படை­யினர் முனைந்தால் அது சம்­பந்­த­மாக வெளிப்­ப­டை­யான விசா­ர­ணைகள் நடை­பெற இடம் அளிக்க வேண்டும். விசா­ரணை நடை­பெற்றால் படை­யினர் கோரும் காணிகள் அவர்கள் செய்யும் வேலைக்கு தேவை­யா­ன­தல்ல என்­ப­தனை நாம் எடுத்துக் காட்ட முடியும்.

4. அவ­ச­ர­மான தேவைகள்

(I). பிர­தேச சபை ரோட்­டுகள் திருத்­தப்­ப­ட­வேண்டும். போக்­கு­வ­ரத்­துக்கு உகந்­த­தாக வீதிகள் சரி­செய்து   கொடுக்­கப்­பட வேண்டும். திணைக்­கள வீதி­களின் அபி­வி­ருத்­தியும் பார்க்­கப்­பட வேண்டும்.

(II) i. முத­ல­மைச்சர் நிதிய நிய­திச்­சட்டம் ஆளு­நரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு வர வேண்டும். தேவை­யில்­லாமல் அதனைத் தாம­தப்­ப­டுத்­திக்­கொண்டே இருக்­கின்றார்.

ii. மாகாண, மத்­திய அலு­வ­லர்­களின் வெற்­றி­டங்கள் உடனே நிரப்­பப்­பட வேண்டும்.

iii. செங்­குத்­தான கட்­டடம் அமைக்கும் செயற்­றிட்­டத்தை (Vertical Building Project) யாழ்ப்­பா­ணத்தில் அமைக்க கௌரவ அமைச்சர் ஃபயிசர் முஸ்­தாபா முன் வந்தார். ஆனால் திடீ­ரென அதற்­கான நிதிகள் வேறெங்­கேயோ மாற்­றப்­பட்டு விட்­டன. விட்ட இடத்தில் இருந்து இந்த செயற்­றிட்டம் தொடர ஆவன செய்ய வேண்டும்.

iv. பாரிய நகர அமைப்பு அமைச்சர் அவர்­களால் (Minister of Megapolis) யாழ் மாந­கர சபைக் கட்­டடம் அமைக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வந்­தன. பூர்­வாங்க வேலை­களும் முடிந்து விட்­டன. இதற்­கு­ரிய நிதியம் வேறெங்கோ கொண்டு சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

v. வலி­காமம் வடக்கில் விடு­விக்­கப்­பட்ட நிலங்­களில் மீள் குடி­யேற்றம் முறை­யாக நடப்­பதை உறுதி செய்ய ஒரு விசேட சிவில் செய­லணி நிய­மிக்­கப்­பட வேண்டும். மயி­லிட்­டி­யிலும் நிய­மிக்­கப்­பட வேண்டும்.

vi. இர­ணை­தீவில் சிவில் நிர்­வாகம் மீண்டும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

vii. வவு­னியா, மன்னார் ஆகிய இடங்­க­ளுக்கு தமிழ் அர­சாங்க அதி­பர்கள் நிய­மிக்­கப்­பட வேண்டும்.

ஆனால் சிங்­க­ள­வர்­களைத் தமிழ் பிர­தே­சங்­க­ளுக்கும் தமி­ழர்­களைச் சிங்­கள பிர­தே­சங்­க­ளுக்கும் நிய­மிக்கும் ஒரு கொள்கை உங்­க­ளுக்­கி­ருந்தால் யாழ்ப்­பா­ணத்­திற்கு அல்­லது கிளி­நொச்­சிக்கு சிங்­க­ளவர் ஒரு­வரை நிய­மி­யுங்கள். எல்­லைப்­புற மாவட்­டங்­க­ளுக்கு சிங்­கள அர­சாங்க அதி­பர்­களை நிய­மிப்­பதால் சட்­டப்­படி காணி­களை உள்ளூர் மக்­க­ளுக்கு முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் கொடுக்­காமல், அவர்கள் மாகா­ணத்­துக்கு வௌியில் இருந்து மக்­களைக் கொண்டு வந்து வட­மா­காண காணி­களில் குடியேற்றுகின்றார்கள்.

viii. தமிழ் மொழியில் உயர் கல்வி கற்கவும் வணிகம் பற்றி கற்கவும் ஏதுவாக வடமாகாண சபை தமிழ்நாட்டுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட அனுமதி தாருங்கள்.  

ix. பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் நடைபெற்ற படியால் மகாவலிச் சட்டம். நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் போன்றவற்றிற்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது மாகாண அதிகாரங்களைப் பாதுகாத்து சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். தற்போது மாகாணங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற அடிப்படையிலேயே அவர்கள் செயலாற்றுகின்றார்கள்.

x. தீவிரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) உடனே கைவாங்க வேண்டும்.

xi.  அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும்.