வடக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களை  மீள ­வ­ழங்­கு­வ­தற்­காக விசேட நட­வ­டிக்­கைகள்    எடுக்­கப்­ப­ட­வேண்டும்.  அத்­துடன்   வடக்­கையும்  தெற் கையும் அபி­வி­ருத்தி ஊடாக இணைப்­ப­தற்கு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்க்­கின்றேன். காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் அதி­கா­ரிகள் விரைவில் கிளி­நொச்­சிக்கு வருகை தந்து  தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பார் கள். இதன் ஊடாக மக்­களின் மனி­தா­பி­மான  பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு எமது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

இந்த அனைத்து   திட்­டங்­க­ளு­டனும் முன் ­செல்ல நாம்   வட­மா­காண சபை­யுடன் இணைந்து  பணி­யாற்ற  தயா­ராக இருக்­கின் றோம்.  முத­ல­மைச்சர் மற்றும் ஆளு­ந­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இந்தத் திட்­டங்­களை முன்­னெ­டுக்க நான் எதிர்­பார்க்­கின்றேன்.   கல்­வித்­து­றையின்  முன்­னேற்­றத்­திற்கு தேவை­யான வகையில் நிதி ஒதுக்­குவேன்.   ஆசி­ரி­யர்கள் பிரச்­சினை இருப்பின் எமக்கு அறி­வி­யுங்கள். கல்வி அமைச்சர் ஊடாக  அதற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுப்பேன். பட்­ட­தா­ரி­க­ளுக்கு சில மாதங்­களில்    தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக நான் கூற விரும்­பு­கின்றேன்  என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார். 

கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற  மாவட்ட அபி­வி­ருத்தி   வேலைத்­திட்­டங்கள்   குறித்த  மீளாய்வு  கூட்­டத்தில்  கலந்­து­கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  இந்த  விட­யங்­களை  கூறினார்.  பிர­தமர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்;

கிளி­நொச்சி மாவட்­டத்தின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் குறித்து ஆரா­யவே நான் இங்கு வந்­தி­ருக்­கின்றேன்.      வடக்கு பகு­தியின்   மக்கள் பிர­தி­நி­தி­களை நான் சந்­தித்த போது  இந்த பகு­தியின்  பிரச்­சி­னைகள் தொடர்பில் என்னால் அறிந்­து­கொள்ள முடிந்­தது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன்  தற்­போது  இங்கு முன்­வைத்த விட­யங்­களை  பாரா­ளு­மன்­றத்தில் பல தட­வை­களும்   என்­னு­டனும்  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.    அந்த விட­யங்கள் குறித்து  ஆராய்ந்து  அபி­வி­ருத்­தியை  பார்ப்­ப­தற்கே நான் வந்தேன்.   சிறி­தரன் எம்.பி. சிங்­கள மற்றும் தமிழ் மொழி­களில் எனக்கு வழங்­கிய கடி­தத்தில் உள்ள விட­யங்கள்  குறித்து  ஆராய நான்  ஆலோ­சனை வழங்­கி­யி­ருக்­கின்றேன். 

இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற ஒன்­பது மாகா­ணங்­களில்  வட­மா­கா­ணமே  அதி­க­ளவு வறு­மையில் வாடு­கின்­றது என்­பதை நாம் நினைவில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும். யாழ்ப்­பா­ணத்தை தவிர்த்­துப்­பார்த்தால் கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­களே அதி­க­ளவில் வறு­மையில் வாடு­கின்­றன. வவு­னியா பிர­தே­சத்தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் உள்­ளது. யாழ்ப்­பா­ணத்தை முன்­னேற்­றும்­போது அத­னூ­டாக தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய  பல பிரச்­சி­னைகள் உள்­ளன.   முத­லா­வ­தாக   இரா­ணு­வத்­திடம் இருக்­கின்ற காணி­களை  மக்­க­ளிடம்   மீண்டும் கைய­ளிக்­க­வேண்டும்.  இது ஒரு விசே­ட­மான தேவை­யாகும்.  இதன்­மூலம்  யாழ். நகரை   பாரிய  நகர  அபி­வி­ருத்­தியை நோக்கி கொண்­டு­செல்ல முடியும். 

அதன்­போது நீர் பாவனை மற்றும் வீண்­வி­ரயம் ஆகி­யன தொடர்பில் பிரச்­சி­னைகள் தோன்­றி­யுள்­ளன. அதனால்  முத­லா­வ­தாக உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த வேண்டும்.  காணி­களை மீள வழங்கி  மக்­களை மீள் குடி­யேற்றும் நட­வ­டிக்­கை­களை  முன்­னேற்­ற­வேண்டும். அந்த செயற்­பாட்டில் தற்­போது  சில முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.  சில பகு­தி­களில் குறை­பா­டுகள் உள்­ளன.  அது­தொ­டர்பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளுடன் இணைந்து அந்தத் திட்­டங்­களை முன்­கொண்டு செல்ல வேண்டும். அதே­போன்று  இந்­தப்­ப­கு­தியில்  வாழ்க்கைத் தரத்தை உயர்த்­து­வ­தற்கும்   அவ­தானம் செலுத்­த­வேண்டும். 

1977 ஆம் ஆண்டு  மகா­வலி திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.   அதன் முன்­னேற்றம்  நாட்டின்   பல  பகு­தி­க­ளுக்கும் சென்­ற­போதும் வடக்கு பகு­தியில்  அதன் நன்மை  வரு­வ­தற்கு முன்னர் யுத்தம்  ஏற்­பட்டு விட்­டது. எப்­ப­டி­யி­ருப்­பினும் அந்த அபி­வி­ருத்­தியை நாம் முன்­னெ­டுக்­க­வேண்டும்.  இந்த பிர­தே­சத்தை    அபி­வி­ருத்தி செய்­யும்­போது  நீரைப் பெற்­றுக்­கொள்­வது என்­பது முக்­கி­ய­மா­னது. மல்­வத்து ஓயா நீர்த்­தேக்கம் ஊடாக மன்னார் மற்றும் வவு­னியா பிர­தே­சங்­க­ளுக்கு  குறிப்­பி­டத்­தக்க நீரைப் பெற்­றுக்­கொள்­ளலாம்.  

அதே­போன்று  தற்­போது நாங்கள் கண்­டி­யி­லி­ருந்து  அம்­பாந்­தோட்டை ஊடாக மொன­ரா­கலை வரை  பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.   ரஜ­ரட்ட பொலன்­ன­றுவை, திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் பாரிய அபி­வி­ருத்தி திட்­ட­ங­களை  உரு­வாக்­கி­யி­ருக்­கின்றோம்.  அந்த அபி­வி­ருத்தி திட்­டங்­களை யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளுக்கு கொண்­டு­வ­ரு­வதே எமது நோக்­க­மாகும்.  இலங்­கையின் அபி­வி­ருத்­தியை   யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து  அம்­பாந்­தோட்டை வரை விஸ்­த­ரிக்க நாங்கள் திட்­ட­மி­ட­வேண்டும். அந்த திட்­டத்தின் கீழ் முத­லா­வ­தாக கிளி­நொச்சி மாவட்­டமே  அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும். அதன் முதல் தேவை­யாக  நீர்  காணப்­ப­டு­கின்­றது.  அதற்­காக   சிறந்த    நீர் திட்­டங்கள்   எமக்குத் தேவைப்­ப­டு­கின்­றன. மழை­கா­லத்தில்  தேவை­யான அளவு  நீர் எமக்கு கிடைக்­கின்­றது.  எனவே  மழை இல்­லாத காலத்தில்  மக்கள் பயன்­பாட்­டுக்­காக நீரை சேமித்து வைக்­க­வேண்­டி­யுள்­ளது. 

மழை நீரைப்­பா­து­காப்பு தொடர்பில்  அவ­தானம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ரஜ­ரட்ட  ராஜ­தானி இருந்­த­போது   முல்­லைத்­தீவு மற்றும் கிளி­நொச்சி பிர­தே­சங்­களில் அதி­க­ளவு வயல்­நி­லங்கள் காணப்­பட்­டன. அக்­கா­லத்தில் விவ­சா­யத்­திற்­காக  நீரைப்­பா­து­காக்கும் திட்­டங்கள்  இருந்­தன.   சில   இடங்­களில் நெல் உற்­பத்தி செய்­யப்­பட்­ட­துடன் சில பிர­தே­சங்­களில் தானி­யங்கள் பயி­ரி­டப்­பட்­டன. அந்த திட்­டங்­களை நாம் மீண்டும் ஆரம்­பிக்­க­வேண்டும். அதே­போன்று  அப்­பி­ர­தே­சத்தில்  மீன்­பிடி  தொழிலை முன்­னேற்­றவும் எதிர்­பார்க்­கின்றேன்.  அத்­துடன் யாழ்ப்­பாணம், மன்னார்,  வவு­னியா,    திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே­சங்­களில் சுற்­று­லாத்­து­றையை   முன்­னேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். பரந்தன் பிர­தே­சத்தில்     கைத்­தொ­ழில்­சா­லை­களை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.   இந்த அனைத்துத் திட்­டங்கள் ஊடா­கவும் இந்­தப்­ப­கு­தியை  அபி­வி­ருத்தி செய்­வது குறித்து நாம் ஆரா­ய­வேண்டும்.  

கிளி­நொச்சி மாவட்டம் 1978 ஆம் ஆண்டு   உரு­வா­கி­யது.   அக்­கா­லத்தில்  யாழ்ப்­பாணம் பகு­தி­யி­லி­ருந்து யாரும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வா­வ­தில்லை. அப்­ப­குதி  யுத்­த­க­ள­மாக இருந்­தது. அதனை  மீண்டும்   முன்­னேற்­ற­ம­டைந்த பிர­தே­ச­மாக மாற்­றி­ய­மைக்­க­வேண்டும்.  வடக்கு, தெற்கு என்ற பேத­மில்­லாமல் நாம் மீண்டும் ஒன்­றி­ணை­யலாம்.   யுத்தம் முடி­வ­டைந்­துள்­ளதால் இப்­ப­கு­தி­களை தேசிய திட்­டங்­க­ளுக்­காக இணைத்­துக்­கொள்ள முடியும். காணிப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  பல தட­வைகள் யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­றி­ருக்­கின்றார். தற்­போது அபி­வி­ருத்­திகள் குறித்து ஆராய நான் வந்­தி­ருக்­கின்றேன். கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­பது மட்­டு­மன்றி மக்­க­ளுக்கு பயன்­பெ­றக்­கூ­டிய வகை­யி­லான   பொரு­ளா­தார உற்­பத்தி குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நாட்டின் மொத்த தேசிய உற்­பத்­திக்கு கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லி­ருந்து கிடைக்கும்  பங்­க­ளிப்பை   ஒரு தசத்­தி­னா­லேனும் அதி­க­ரிக்­க­வேண்டும். எதிர்­கா­லத்தில் இப்­ப­கு­திக்கு நான் மீண்டும் விஜயம் செய்து அபி­வி­ருத்தி   திட்­டங்கள் குறித்து தேடிப்­பார்க்க எதிர்­பார்க்­கின்றேன். விசே­ட­மாக மழை­நீரை சேக­ரிக்கும் திட்­ட­மொன்றை நாம் ஆரம்­பிக்­க­வேண்­டி­யுள்­ளது.   இதற்­காக பரந்தன் பகு­தியில் காணியைப் பெற்­றுக்­கொண்டு பின்னர் அது தொடர்பில்   முத­லீட்டு சபை­யுடன் நான் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன். யுத்­தத்தால்  பாதிக்­கப்­பட்ட இப்­ப­கு­தி­களின் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். அதே­போன்று காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். 

அவர்கள்  விரைவில்  இப்­ப­கு­திக்கு வந்து   நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக அறி­வித்­தார்கள்.  அந்­த­வ­கையில் மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.   இப்பகுதியின் இளைஞர் யுவதிகளுக்காக நாம் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கவேண்டியுள்ளது. யுத்தத்தினால்    அங்கங்களை இழந்த  விசேட தேவையுடையோரின் பிரச்சினைகளையும்  நாங்கள் தீர்க்கவேண்டியுள்ளது.   இந்த  அனைத்து   திட்டங்களுடனும் முன்செல்ல நாம்   வடமாகாண சபையுடன் இணைந்து  பணியாற்ற  தயாராக இருக்கின்றோம்.  முதலமைச்சர் மற்றும் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் திட்டங்களை முன்னெடுக்க நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்காலத்தில் மக்களின்  பொருளாதார வளர்ச்சி குறித்து ஆராய்ந்து பார்ப்பேன்.  அரசியல் ஊடாக அதுவே செய்யப்படவேண்டும்.   கல்வித்துறையில்  முன்னேற்றத்திற்கு தேவையான வகையில் நிதி ஒதுக்குவேன்.   ஆசிரியர்கள் பிரச்சினை இருப்பின் எமக்கு அறிவியுங்கள். கல்வி அமைச்சர் ஊடாக  அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன் பட்டதாரிகளுக்கு சில மாதங்களில்    தொழில் பெற்றுத்தருவதாக நான் கூற விரும்புகின்றேன்.