சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு ரஸ்யப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மோதலிலேயே நான்கு ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சிரியாவின் கிழக்கில் உள்ள டெய்ர் இஸ் சோர் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.சிரிய படையினருக்கு ஆலோசனை வழங்கிவந்த ரஸ்யாவின் இராணுவ ஆலோசகர்களே கொல்லப்பட்டுள்ளனர் என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இரவு இடம்பெற்ற மோதலில் இரு ரஸ்ய வீரர்கள் அந்த இ;டத்திலேயே கொல்லப்பட்டனர் இருவர் வைத்தியசாலையில்  இறந்துள்ளனர் 43 தீவீரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என ரஸ்யா தெரிவித்துள்ளது.கடந்த புதன்கிழமை ஐ.எஸ் அமைப்பினர் சிரிய ரஸ்ய படையினர் மீது எதிர்பாராத தாக்குதல் ஒன்றை மேற்கொண்டதில் 15 சிரிய ரஸ்ய படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த தாக்குதலின் போது  இராணுவ வாகனங்களை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ள ஐ.எஸ் அமைப்பினர் மற்றொரு தாக்குதலில் எட்டு சிரிய படையினரை கொன்று பலரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்..