மாத்தறை பகுதியில் இன்று காலை  துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்னர்.

அந்த வகையில் இன்று காலை மாத்தறை நுப்பே என்னும் இடத்திலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆடை விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் வைத்தே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டனர்.

எனினும் இந்த சம்பவத்தின்போது எவரும் காயமடையவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.