மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளான அதேவேளை போதிய வசதிகளின்றி நீண்டகாலமாக பல சிரமத்திற்கு மத்தியில் இயங்கி வரும் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையை வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இத் தீர்மானம் எட்டப்பட்டது.

போதிய வசதிகளின்றி காணப்படும் லிந்துலை வைத்தியசாலையை பொருத்தமான இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மயில்வாகனம், அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைத்தியசாலையானது நாகசேன பகுதியில் அமைக்கப்படும் எனவும் இந்தக் கூட்டத்தின் போது கூறப்பட்டது.