தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

Published By: Digital Desk 4

28 May, 2018 | 09:37 PM
image

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை இன்று மாலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயற்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இந்த ஆலை எதிர்ப்பாளர்கள், கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதியன்று நடத்திய போராட்டத்தின் போது, பொலீஸார்  துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதன் போது 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக கூறினார்கள். அதே போல் இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.அதில் ‘பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக’ தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24