(ரொபட் அன்­டனி)

நாட்டின்  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி  உயர்­வ­தற்கும் தொழில்­வாய்ப்­புக்கள் அதி­க­ரிப்­ப­தற்கும்  வெளி­நாட்டு நேரடி முத­லீ­டுகள்  மிகவும்  அவ­சி­ய­மா­ன­வை­யாகும்.  வெளி­நாட்டு முத­லீ­டுகள் இல்­லா­விடின்   புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது  மிகவும் கடி­ன­மா­ன­தாக இருக்கும். விசே­ட­மாக  புதிய வெளி­நாட்டு  முத­லீ­டு­களை பெற்­றுக்­கொள்­வதன் மூலமே    பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை மேம்­ப­டுத்த முடியும். 

தற்­போ­தைய நிலை­மையில் எமது நாட்­டுக்கு மொத்த தேசிய உற்­பத்­தியில்  5 வீதம் அளவில் வெளி­நாட்டு முத­லீ­டுகள்  கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஆனால் அந்தத் தொகை குறைந்தள­வி­லேயே   காணப்­ப­டு­கின்­றது. முக்­கி­ய­மாக தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வதில், நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் மிக முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது.  தொழி­லின்மை வீதத்தைக் குறைப்­பதன் மூலமே உண்­மை­யான  பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை நோக்கி நாம் செல்ல முடியும்.அத்­துடன் பொரு­ளா­தார வளர்ச்­சியும் அதி­க­ரிக்கும். 

கடந்த 2017ஆம் ஆண்டைப் பொறுத்­த­வ­ரையில் எமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி வீத­மா­னது 3.1 வீத­மா­கவும் வேலை­யின்மை வீத­மா­னது 4.3 வீத­மா­கவும் பதி­வா­கி­யி­ருந்­தது. இது ஆரோக்­கி­ய­மான ஒரு  குறி­காட்­டி­யாக அமை­ய­வில்லை என்­பதை இங்கு  கவ­னத்­தில்­கொள்­ள­வேண்டும். 

2015ஆம் ஆண்டு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  நாட்டில் அடுத்து வரும் ஐந்து வரு­டங்­களில் 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­களை  உரு­வாக்­கு­வ­தாக   தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் மூன்­றரை வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில்   எத்­தனை தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. எவ்­வா­றெ­னினும் இந்த தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கத்­திற்கு   வெளி­நாட்டு   நேரடி முத­லீ­டுகள்   முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக    காணப்­ப­டு­கின்­றன. 

அந்த வகையில்  கடந்த 2017ஆம் ஆண்டு  நாட்­டுக்கு 1900 மில்­லியன் டொலர்  வெளி­நாட்டு முத­லீ­டுகள் கிடைத்­த­தாக   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­தி­ருந்தார்.  கடந்த  2016ஆம் ஆண்­டுடன்  ஒப்­பி­டு­கையில்  ஒரு அதி­க­ரிப்பை காண­மு­டியும்.  2015ஆம் ஆண்டில் 1160 மில்­லியன் டொலரும் 2016ஆம் ஆண்டில் 1079 மில்­லியன் டொலரும் முத­லீ­டு­க­ளாக கிடைத்­துள்­ளன.  2012ஆம், 2013ஆம் 2014ஆம் ஆண்­டு­களில் சற்று அதி­க­ரித்த  முத­லீ­டுகள்  காணப்­ப­டு­கின்­றன.  அந்த ஆண்­டு­களில் முறையே  1382, 1437, 1635  மில்­லியன் டொலர்   முத­லீ­டு­க­ளாக   கிடைத்­துள்­ளன. 

அந்த வகையில் பார்க்கும் போது 2012 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அதி­க­ரித்­து­வந்த வெளிநாட்டு  நேரடி முத­லீ­டுகள்  பின்னர் குறை­வ­டைந்து செல்­வதை காண முடி­கின்­றது. குறிப்­பாக 2015 , 2016  ஆகிய  ஆண்­டு­களில்  குறைந்­த­ள­வி­லான முத­லீ­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறு­வதைப் போன்று 2017ஆம் ஆண்­டி­லேயே    அதி­கூ­டிய வெளி­நாட்டு முத­லீ­டுகள் பதி­வா­கி­யுள்­ளன.  இங்கு  ஏன்  வெளி­நாட்டு முத­லீ­டுகள் கூடியும் குறை­வ­டைந்தும் காணப்­ப­டு­கின்­றன  என்­பது குறித்து ஆரா­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.  அதா­வது ஒரு­நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்மை,  வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதி­க­ரிப்­பதில் முக்­கிய தாக்கம் செலுத்­து­கி­றது.  

அர­சியல் ஸ்திரத்­தன்மை  சரி­யாக இருக்கும் பட்­சத்தில் அதி­க­ரித்த முத­லீ­டு­களை எதிர்­பார்க்­கலாம். ஆனால் அர­சியல் ஸ்திரத்­தன்மை தளம்பல் நிலை­மைக்கு சென்றால் சர்­வ­தேச நாடு­களின் நம்­பிக்கை சிதை­வ­டைந்து  முத­லீ­டுகள் குறை­வ­டை­யலாம்.  அது­மட்­டு­மன்றி    நாட்டின்  முத­லீ­டுகள் தொடர்­பான அணு­கு­முறை, சட்­ட­திட்­டங்கள் மற்றும்  முத­லீட்டு பாது­காப்பு சூழல்  அனு­ம­தி­பெ­று­வ­தற்­கான வழி­மு­றைகள் என்­ப­னவும் வெளி­நாட்டு நேர­டி முத­லீ­டு­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. 

முன்­னைய ஆட்சிக் காலத்தில்  இலங்கை முத­லீட்டு சபையின் கீழ் பதிவு செய்­யப்­பட்டு பெறப்­பட்ட கடன்­களும்   வெளி­நாட்டு முத­லீ­டுகளா­கவே பார்க்­கப்­பட்­டன. ஆனால் அது எந்­த­ளவு தூரம் சரி­யா­னது என்­பது குறித்து  ஆரா­ய­வேண்டும். வெளி­நாட்டு முத­லீடு என்­பது  நீண்­ட­கா­லத்தில் அதி­க­ளவு  தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தாக அமை­ய­வேண்டும். 

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில்  சீனா செய்­துள்ள முத­லீ­டா­னது  உள்­நாட்டில் எந்­த­ளவு தூரம்   தொழில்­வாய்ப்­புக்­களை  அதி­க­ரிக்­கப்­போ­கின்­றது என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும். எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போ­தைய  ஆட்­சியில் கடன்கள் அன்றி நேரடி முத­லீடு என்­பது குறித்து  கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது. 

இது தொடர்பில்  சிரேஷ்ட சர்­வ­தேச பொரு­ளா­தார ஊட­க­வி­ய­லாளர்  சிஹார் அனீஸ்  கருத்­துப்­ப­கிர்­கையில்,  இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் வெளி­நாட்டு முத­லீ­டுகள் என்­பது  குறை­வா­கவே உள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். 

வருடம் ஒன்­றுக்கு நான்கு அல்­லது ஐந்து பில்­லியன் டொலர்  முத­லீ­டு­களை பெறு­வதே  நாட்­டுக்கு உகந்­த­தாக இருக்கும். இதன் மூலமே புதிய தொழில்­வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்க முடியும். ஆனால் நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்மை மற்றும் செயற்­பாட்டு உறு­தித்­தன்மை, முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான  வச­திகள்,  இலஞ்சம் ஊழல்  இல்­லாத நிலைமை போன்­றன முக்­கிய கார­ணி­க­ளாக உள்­ளன. 

இலங்­கையில் முத­லீடு செய்ய வரு­கின்ற சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்கள்  இலங்­கையில்  சிக்­கல்­களை எதிர்­கொள்ளும் சந்­தர்ப்­பங்­களில் உட­ன­டி­யாக வியட்நாம், தாய்­லாந்து  மற்றும் மியன்மார் ஆகிய நாடு­க­ளுக்கு  செல்ல விரும்­பு­கின்­றனர். அங்கு காணப்படும்  முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான சாத­க­மான சூழலே  இதற்கு கார­ண­மாகும். எனவே இது தொடர்பில் கொள்கை வகுப்­பா­ளர்­களும்    அதி­கா­ரத்தில் இருப்­போரும் சிந்­தித்து செயல்­ப­ட­வேண்டும் என்றார். 

உண்­மையில் இலங்­கையில்  வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள்   எதிர்­கொள்ளும்   முக்­கியப் பிரச்­சி­னை­களில் ஒன்­றாக  சட்­ட­ரீ­தி­யாக  அனு­மதி பெறும் விவ­காரம் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் முத­லீட்டு சபை இருந்­த­போ­திலும் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளிடம்  அனு­மதி பெற­வேண்­டிய தேவை காணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இதற்­கா­கவே  ஒற்­றைச்­சா­ளரம் என்ற   எண்­ணக்­க­ருவை உல­க ­வங்கி சிபாரிசு செய்­தி­ருந்­தது. அதா­வது  முத­லீட்­டா­ளர்கள்  ஒரே கூரையின் அனு­ம­தி­களை பெற்­றுக்­கொள்ளும் வகையில்  ஒற்­றைச்­சா­ளரம்    என்ற  எண்­ணக்­கரு அவ­சி­ய­மா­கின்­றது என்­பதை உலக வங்கி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. 

எனவே அர­சாங்கம்  இந்த  விடயம்  தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து  வெளிநாட்டு முதலீடுகளை  அதிகளவில் அதிகரித்துக்கொள்வது குறித்து  கவனம் செலுத்த வேண்டும்.  வெளிநாட்டு முதலீடுகள்  எமது நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை கிடைப்பதாக இருக்கவேண்டும். குறிப்பாக எமது நாட்டில் தற்போது தொழிலின்மை பிரச்சினையானது  பாரிய நெருக்கடியாக இருக்கிறது. 

எனவே   தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும். அதற்கு  முதலீடுகள் அவசியமாகின்றன. அதிலும்  வெளிநாட்டு  நேரடி முதலீடுகள் முக்கியமாகின்றன. எனவே  எமது நாட்டுக்கு நன்மை கிடைக்கின்ற வகையிலான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளவும்   முதலீடுகளுக்கான சாதகமான சூழலை  ஏற்படுத்தவும்   சம்பந்தப்பட்ட அதிகார தரப்பினர் சரியான  திட்டங்களை   முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.