(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற அசாதாரண காலநிலையின் பாதிப்படைந்தோருக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ள  புலம் பெயர்வாழ் இலங்கையர்கள், மற்றும் சர்வதேச சமூகத்தினருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துடன், ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்க அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை வீழ்ச்சி குறைவடைந்ததாக காணப்பட்டாலும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு  குடியேற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்பாசனம், நீர்வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் பாதுகாப்பு படையினருடன் இணைந்து நிவாரணப்பணிகளை வழங்குவதில் ஈடுபட்டு வருகின்றது. 

எனவே நிவாரணம் வழங்க விரும்புவோர் தமது நிதி பங்களிப்பினை அனர்த்த நிவாரண கணக்கு இல.7040171, இங்கை வங்கி, டொரிங்டன் சதுக்கம் என்ற உத்தியோகபூர்வ‍ே அனர்த்த நிவாரண கணக்கில் வைப்பிலிடுமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.