மரியன்னையின் சிலை மன்னாரில் உடைப்பு 

Published By: Priyatharshan

28 May, 2018 | 02:59 PM
image

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு பல வருடங்களாக அவ்விடத்தில் வழிபட்டுவந்த மரியன்னையின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த மரியன்னையின் சிலை வைக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடி பேழையானது மேற்பகுதி உடைக்கப்பட்டதோடு, அதனுள் வைக்கப்பட்டிருந்த மரியன்னையின் சிலை உள்ளிருந்தவாறே சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த வீதியூடாக இன்று காலை பயணித்த மக்கள் குறித்த சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் தெய்வங்களின் சிலைகள் இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றபோதும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும் சிலைகள் உடைப்பு தொடர்பில்  இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46