(எம். நியூட்டன்)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கடும் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடிய பிரதமர், நண்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் இருவேறு பிரிவுகளாக முக்கிய கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ். மாவட்டத்தைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணாச சபை உறுப்பினர்களுடனும் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் அபிவிருத்தி மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடலும் பாதுகாப்புப் படையினருடன் குறிப்பாக இராணுவம், பொலிஸ் கடற்படை, விமானப்படையினருடன் மற்றொரு கூட்டமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முப்படையினருடனான இக்கூட்டத்தில் வடக்கில் விடவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.