-மன்னார் நிருபர்-

வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட சுமார் 22 மீற்றர் கொண்ட பிரதான பாலம் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ராஜன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(27-05-2018) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு, மக்களின் போக்குவரத்திற்காக விடப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தினை பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரீமூஸ் சிறாய்வா கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இதன் போது விருந்தினர்களான அருட்தந்தை நவரட்ணம் அடிகளார், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.