ஜனா­தி­பதி, பிர­தமர் அர­சாங்­கத்தை மலர் மெத்­தையின் மீதி­ருந்­த­வாறு உரு­வாக்­க­வில்லை

Published By: MD.Lucias

20 Feb, 2016 | 09:07 AM
image

தற்­போ­தைய ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மை­யி­லான நல்­லாட்சி கூட்டு அர­சாங்­கத்தை மலர் மெத்­தையின் மீதி­ருந்­த­வாறு உரு­வாக்­க­வில்லை. மாறாக பல்­வே­றுப்­பட்ட சவால்­க­ளிற்கு முகங்­கொ­டுத்து, ஏன் உயிர் தியா­கங்­களைச் செய்தே இவ்­வெற்­றியை ஈட்­டிக்­கொண்டோம். பல்­வே­று­பட்ட சவால்­க­ளிற்கு மத்­தியில் நாங்கள் கட்­டி­யெ­ழுப்­பிய நல்­லாட்­சி­யினை சீர்­கு­லைக்க ஒரு­வ­ருக்கும் சந்­தர்ப்பம் வழங்­கக்­கூ­டா­தென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலை­வரும் துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச்­ச­ரு­மா­கிய அர்­ஜுன ரண­துங்க விளை­யாட்டுத்துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழு­தி­யுள்ளார்.

2016–-2018 கிரிக்கெட் தேர்­தல்­களின் பொழுது விளை­யாட்டு அத்­தி­யட்­ச­கரின் முறை­யற்ற செயற்­பா­டுகள் மற்றும் சட்­ட­வி­ரோத தேர்தல் தொடர்­பாக, எனும் தலைப்பின் கீழ் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்கு அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க அனுப்­பிய பதில் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

கிரிக்கெட் தேர்­தலின்போது விளை­யாட்டு அத்­தி­யட்­ச­கரின் செயற்­பா­டு­க­ளிற்கு சவால் விடுக்கும் வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற ஒவ்­வொரு விசா­ர­ணை­க­ளிலும் சாட்சி வழங்­கு­வ­தற்கு தான் ஆயத்­த­மாக இருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.

அத்­தி­யட்­சரின் முறை­யற்ற செயற்­பா­டுகள் கார­ண­மாக கிரிக்கெட் தேர்­தல்­களின் மாத்­திரம் குழப்­ப­நிலை தோன்­ற­வில்லை. மாறாக பூப்­பந்து, ஹொக்கி, வொலிபோல், ரக்பி, சைக்கிள் மற்றும் உடற்­த­கு­திகாண் போன்ற தேர்­தல்­க­ளிலும் பல குழப்ப நிலை­மைகள் தோன்­றி­யுள்­ளன. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கீழ் இவ்­வா­றா­னதோர் நிலை­யினை நாங்கள் ஒரு போதும் எதிர்­பார்க்­க­வில்லை. ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை பாது­காப்­ப­தற்கு ஒரு போதும் முயற்­சிக்க வேண்­டா­மென நான் உங்­க­ளிடம் தாழ்­மை­யுடன் கேட்­டுக்­கொள்­கின்றேன். தேர்­தல்­களை நடாத்தும் பொழுது விளை­யாட்டு அத்­தி­யட்­ச­ருக்­கெ­தி­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­மாயின் சுயா­தீ­ன­மான குழு­வொன்­றினை நிய­மித்து முறை­யான விசா­ர­ணை­யொன்­றினை முன்­னெ­டுப்­பது துறைச்சார் அமைச்­ச­ரா­கிய உங்­க­ளது கட­மை­யாகும். தாங்கள் ஊழல் மோச­டிக்­கா­ரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­களை பேணு­கின்­ற­மை­யி­னாலா இவ்­வி­டயம் தொடர்பில் இன்­னமும் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை?

தற்­போ­தைய ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மை­யி­லான நல்­லாட்சி கூட்டு அர­சாங்­கத்தை மலர் மெத்­தையின் மீதி­ருந்­த­வாறு உரு­வாக்­க­வில்லை. மாறாக பல்­வே­றுப்­பட்ட சவால்­க­ளிற்கு முகங்­கொ­டுத்து, ஏன் உயிர் தியா­கங்­களைச் செய்தே இவ்­வெற்­றியை ஈட்­டிக்­கொண்டோம். அன்று நாங்கள் முன்­னெ­டுத்த மக்கள் போராட்­டத்­திற்­கெ­தி­ராக நகைத்த ஒரு சிலர் இன்று எங்கள் அர­சாங்­கத்தில் அமைச்சர் பத­வி­யையும் மற்றும் உய­ரிய பத­வி­க­ளையும் பெற்­றுக்­கொண்டு நல்­லாட்­சியைச் சீர்­கு­லைக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள். தாங்கள் இவ்­வா­றா­னதோர் நிலைக்குச் செல்­லா­தி­ருக்­கு­மாறு என்­னுடன் நெருங்கி வேலை­செய்யும் சகோ­தர அமைச்­ச­ரா­கிய உங்­க­ளிடம் கேட்­டுக்­கொள்­கின்றேன். திலங்க சும­தி­பாலவின் அர­சியல் வர­லாறு தொடர்­பாக மாத்­திரம் விசா­ரித்து விசா­ர­ணை­யினை நிறைவு செய்­யாது அவ­ரு­டைய அர­சியல் வர­லாற்­றினை மேலும் விசா­ரணை செய்து மன­சாட்­சிக்கு இணங்க செயற்­ப­டு­மாறு நான் உங்­க­ளிடம் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

விளை­யாட்டு ஒழுங்­கு­வி­திகள் 16 (2) ஆம் பந்­திக்­க­மைய எந்­த­வொரு தேர்­தல்கள் மூல­மாக தேசிய விளை­யாட்டுச் சங்­கத்தின் பத­வியின் பொருட்டு நிய­மிக்­கப்­பட்ட பின்னர் தகு­தி­யற்ற நப­ரென கரு­தப்­ப­டு­மாயின் அவரை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்கும் பொறுப்பு விளை­யாட்டுத் துறை அமைச்­சரைச் சாரும். இச்­செ­யன்­மு­றை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கிரிக்கெட் தேர்­தலில் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் தகுதி நிலை தொடர்­பாக ஆரா­யு­மாறு நான் உங்­க­ளிடம் கேட்­டுக்­கொள்­கின்றேன். அத்­துடன் கிரிக்கெட் தேர்­தல்­களின் பொழுது விளை­யாட்டு அத்­தி­யட்­ச­கரின் செயற்­பா­டுகள் தொடர்­பாக முறை­யாக விசா­ர­ணை­யொன்­றினை முன்­னெ­டுக்­கு­மாறும் கேட்­டுக்­கொள்­கின்றேன்.

அவ்­வி­சா­ர­ணையின் பொழுது சாட்சி வழங்­கு­வ­தற்கு நான் தயா­ரா­கவே உள்ளேன். அவ்­வி­சா­ர­ணை­களின் பொழுது விளையாட்டு அத்தியட்சகரின் செயற்பாடுகள் தவறென உறுதிப்படுத்தப்படுமாயின் அவற்றிற்கெதிராக சட்டத்திட்டங்களிற்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்குமாறும் தகுதியற்ற நபர்களை பணிநீக்கம் செய்யுமாறும் அநீதியிழைக்கப்பட்ட நபர்களுக்கு சாதாரணத்தை நிலைநாட்டுமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நல்லாட்சியை சீர்குலைக்கின்ற இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை அறிவூட்டுவது என்னுடைய கடமை என்பதனையும் இறுதியாக நான் உங்களிடம் கூறவிரும்புகின்றேன் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55