ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பிரதேசத்தில் கார் ஒன்று 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை இரவு 09.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் நேற்று இரவு ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த காரில் பயணித்தவர்கள் மது அருந்திய நிலையில் காரைச் செலுத்தியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதெனவும் மது அருந்தியமைக்கான ஆதாராங்கள் காரினுள் உள்ளனதெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்திற்குள்ளான கார் குறித்து எவரும் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபடவில்லையென தெரிவித்த பொலிஸார் வாகன உரிமையாளரையும் வாகனத்தை செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.