(இரோஷா வேலு) 

கொழும்பில் இரு வேறு பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் புறக்கோட்டை சந்தைக்கருகில் வைத்து புறக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3.200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆராச்சிவத்த, கொழும்பு-12  பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவரும் 2.500 மில்லிகிராம் ஹேரோயினுடன் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.