தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் உத்தி‍யோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் தபால் சேவையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதனை  நிறைவேற்றுமாறுக் கோரி நாம் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம்.

எனினும் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காத காரணத்தினாலேயே எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.