வெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முற்பட்ட வேளை பரிதாபகரமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மாதாம்பே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முயற்சித்தபோதே இவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய தசாநாயக்க பதிருன்னகாலாகே டிலான் சம்பத் (வயது 29) என்பவர் ஆவார். 

உயிரிழந்த இவரின் சேவையை பாராட்டி மரியாதை செலுத்தும் விதமாகவே பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.