நோர்வூட் மேற்பிரிவு தோட்டப் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை குறித்த சிறுத்தை உயிரிழந்ததை அவதானித்த நோர்வூட் மேற்பிரிவு தோட்ட காவலாளர்கள்  பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதன்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது சிறுத்தையின் தலைப் பகுதியில் தாக்குதல் நடத்தி சிறுத்தையை கொலை செய்துள்ளதாகவும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட சிறுத்தையின் பற்களையும் நகங்களையும் தாக்குதல்தாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்தனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.