கும்கி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால்.

விக்ரம் பிரபு நடித்து வெற்றிப் பெற்ற  படம் கும்கி. இயக்குநர் பிரபு சாலமனுக்கும் வெற்றியளித்த இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார் பிரபு சாலமன்.

தொடரி படத்தின் தோல்விக்கு பிறகு கும்கி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி மீண்டும் முன்னணி இயக்குநராக உயரவேண்டும் என்று நினைத்த பிரபு சாலமன், இதற்காக கடுமையாக உழைத்தார்.

தாய்லாந்திற்கு சென்று இப்படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கியிருக்கிறார். தற்போது கேரளாவில் முகாமிட்டிருக்கும் பிரபு சாலமன், விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்து காட்சிகளை எடுத்து வருகிறார். இதன் மூலம் கும்கி 2இல் நடிப்பது விஷ்ணு விஷால் என்பது உறுதியாகியிருக்கிறது.

மாவீரன் கிட்டு, கதாநாயகன் என்று இரண்டு தொடர் தோல்வி படங்களை கொடுத்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு இந்த படம் கைகொடுக்கும் என்கிறார்கள் திரையுலகினர். இவர் தற்போது ஜகஜ்ஜால கில்லாடி, சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்ஸசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.