தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், சென்னையில் உள்ள அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த கொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக கோரி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டினை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.