தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 95 வாலிபர்களை காவல்துறையினர் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்தமை தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி சம்பவத்தை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர் என கிடைத்த உத்தரவை தொடர்ந்து  நீதிமன்ற அனுமதியுடன் சென்று பார்த்த சட்டத்தரணியொருவர் இதனை தெரிவித்தள்ளார்.

குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவேளை அங்கு 95 பேர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன் என அந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களில் 65 பிணையில் விடுதலை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் இரத்தக்காயங்களுடன் காணப்படுகின்றனர்.சட்டவிரோத காவலில் இவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியுள்ளன.