மஸ்கெலியா-கித்துள்கல பகுயில் சட்டவிரோதமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேக நபர்களை மஸ்கெலியா விஷேட அதிரடிபடையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு முச்சக்கரவண்டியையும் கைபற்றியுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்ந்தும் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என விஷேட அதிரடிபடையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட ஐந்து சந்தேகநபர்களிடம் 27 ஹெரோயின் பக்கற்றுகள் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் ஐவரும் கித்துள்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் மஸ்கெலியா விஷேடஅதிரடி படையினர் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கையினை கித்துள்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.