மகா ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக நாத்தாண்டிய, மாவெவ மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த வௌ்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

புத்தளம் - கொழும்பு பிரதான வீதி, லுனுவில பாலத்தின் மீது சிறிய வாகனங்கள் பயணிப்பது அவதானநிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வௌ்ளப்பெருக்கை காண பொதுமக்களை வருவதை தவிர்க்குமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.