நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் கடும் குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகிறது. 

இந் நிலையில் தொடர்ந்தும் பெய்து கொண்டிருந்த மழை நேற்று இரவுடன் குறைந்துள்ளது.

 இன்று விடியற் காலைமுதல் காலநிலை மப்பும் மந்தாரமாக காணப்படுவதோடு பொகவந்லாவ, அட்டன், டிக்கோயா, மஸ்கெலியா, தலவாகலை, கொட்டகலை, நுவரெலியா, அக்கரபத்தனை, டயகம, கினிக்தேனை ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.

கேசல்கமுவ ஒயாவின் நீர் மட்டம் குறைந்தளவில் காணபடுகின்றமை குறிப்பிடதக்கது.