முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசுவாமி

Published By: Digital Desk 4

25 May, 2018 | 06:55 PM
image

இன்று கர்நாடக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றது.

கர்நாடக சட்டபேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன. இதனையடுத்து, பெங்ளூரிலுள்ள விதான் சவுதாவில் ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல் அமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார். அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்ற பின்னர் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் வீடு திரும்புவார்கள் என்று முதல் அமைச்சராக பொறுப்பேற்ற குமாரசுவாமி தெரிவித்தார்.

இந்நிலையில், முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக தனது அரசின் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் பற்றி சட்டசபையில் குமாரசாமி பேசினார். அப்போது, ‘காங்கிரஸ் - ம.ஜத கூட்டணி ஐந்து ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். நாங்கள் மக்களுக்காக உழைப்போம். எங்கள் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என்றார்.

அவரைத்தொடர்ந்து எதிர்கட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடியூரப்பா பேசினார். எடியூரப்பா பேச்சின் இடையிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் சப்தமாக சிரித்தனர். முதல்-மந்திரி குமாரசாமியும் இடையில் எழுந்து பேசினார். பின்னர் பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அவையில் இருந்த 117 சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம்,  ஆதரவளித்ததை தொடர்ந்து குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.

இவர்கள் இருவரை தவிர காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 பேரும், ம.ஜ.த. கட்சியிலிருந்து 12 பேரும் என மொத்தம் 32 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கவிருக்கிறார்கள். சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் தெரிவு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பா.ஜ.க.வின் எடியூரப்பா தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52