(நா.தினுஷா)

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வி அமைச்சு விரைவில் தீர்வு காணவேண்டும். அத்தோடு சைட்டம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு அறியதருவதோடு மாணவர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என சைட்டம் மாணவர் செயற்பாட்டு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் தொடர் பிரச்சினை அமைச்சரவையின் மூலம் தீர்கப்படபோவதில்லை. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், எதிர்காலம் குறித்துஅரசாங்கத்தின் ஈடுபாட்டுடனான செயற்பாடகளின் மூலமே விரைவில் பிரச்சினைகளுக்கு முடிவுகாண முடியும் எனக் குறிப்பிட்டனர்.

இது குறித்து குழுவின் செயலாளர் சானக திஸ்சேரன் குறிப்பிடுகையில், சைட்டம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் சமர்பிக்கபட்டுள்ளது.

இதேவேலை ஜனாதிபதி, உயர்கல்வி அமைச்சர் விஜயதாஷ மற்றும் அரச வைத்தியர் சங்கத்தினர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் மூலம் சைட்டம் கல்லூரி மாணவர்கள் 980 பேரையும் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகழகத்துடன் இணைத்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சைட்டம் மாணவர்களின் பிரச்சினை கபினட் பத்திரங்களினால் மாத்திரம் தீர்க்கபட போவதில்லை. அவ்வாறே மாணவர்கள் மத்தியில் எதிர்பார்புக்களை தூண்டி ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளபட்டு வருகின்றன. 

எங்களின் தேவைகளுக்காக வீதியில் இறங்கி ஆர்பாட்டங்களை மேற்கொள்போவதில்லை அதேபோன்று மாணவர்கள் என்ற ரீதியில் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை தூண்டும் வகையில் செயற்படுவது எங்களது எண்ணமும் இல்லை என தெரிவித்தார்.