" 20 ஆவது திருத்தம் : ஜனாதிபதி, பிரதமர் தமது நிலைப்பாட்டை உடன் அறிவிக்கவும் "

Published By: Vishnu

25 May, 2018 | 02:56 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

அரசாங்கத்திற்கு தாமதமாக்கும் நோக்கம் இல்லாமலிருந்தால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை  3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பினூடாக அனைத்தையும் கொண்டு வருவதற்கே நாம் முனைந்தோம். ஆனாலும் தற்போதைய அரசியல் சூழலில் புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்கான சாத்தியம் முற்றிலும் குறைவாகும். அதன் காரணமாகவே ஜனநாயகத்தை பலப்படுத்தும் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எமது நாட்டில் பல நெருக்கடிகள‍ை ஏற்படுத்தியது. அது மாத்திரமின்றி ஜனநாயக நிறுவனங்களின் அதிகாரங்களை தாழ்த்தியுள்ளது. பாராளுமன்றத்தை அதிகாரமற்றதாக மாற்றியுள்ளது. அமைச்சரவையின் நிலைமையும் அப்படியாகும். அந்த முறைமை நீதிமன்ற சுயாதீனத்தையும் இல்லாமல் செய்தது.

ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் 20 ஆவது  திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தனது நிலைப்பாட்டை உடன் அறிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44