கொழும்பில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையில் இருந்து கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள முதன்மை உப மின் விநியோக கட்டமைப்புக்கு மின் வழங்கும் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாகவே இவ்வாறான மின் தடை ஏற்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இதனால் கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப் பகுதிகளிலும் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.