கனடாவில் அமைந்துள்ள இந்திய உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொரான்டோவிற்கு அருகில் உள்ள மிசிசாகுவா பகுதியில் அமைந்துள்ள பொம்பே பேல் என்ற இந்திய உணவு விடுதியிலேயே குறித்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

இக்குண்டு வெடிப்பு  சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட  விசாரணையில் இரு மர்ம நபர்கள் உணவு விடுதிக்குள் வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது