தூத்துக்குடியில் காவல்துறையினரால் சுடப்பட்ட பொது மக்களில் 14 பேரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளது என மாவட்டத்தின் புதிய கலெக்டர்  சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளராக பதவியேற்றவர் பதவி நீக்கப்பட்டு புதிய ஆட்சியாளராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் 14 பேர் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளனர்  என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் 102 பேர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது தமிழக அரசாங்கமும் அதுவே தனது முடிவு என அறிவித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.