நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைசெய்யபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு அபாய காரணமாக மீண்டும் குறித்த பகுதியில் மண் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம்  என கினிகத்தேனை பொலிஸாரால் சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஹட்டன் - கொழும்பு ஊடாக ஏனைய பிரதேசங்களுக்கு போக்குவரத்தினை மேற்கொள்ளும் சாரதிகள் நோட்டன் பீரீஜ், களுகொல்ல  ஊடாக போக்குரத்தினை மேற்கொள்ளுபடியும் ஹட்டன், கண்டி, நாவலபிட்டி பகுதிகளுக்கு செல்லும்

வாகனங்கள் ஹட்டன் - கொட்டகலை ஊடாக திம்புள்ளபதனை வழியாக நாவலபிட்டி கண்டி பகுதிகளுக்கு செல்லமுடியுமென கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.