(எம்.நியூட்டன்)

முள்ளியாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தாம் செலுத்திய பணத்தினை மீள வழங்குமாறுக் கோரி  வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மகாண அவைத் தலைவர் சிவஞானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வட மாகாண சபையே ஏற்பாடு செய்யவுள்ளது எனத் தெரிவித்து அந்த நிகழ்வின் செலவுக்காக வட மகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டது.

எனினும் குறித்த நிகழ்வை வட மாகாண சபை செய்யவில்லை என்பதால் தன்னால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட பணத்தை மீள வழங்க வேண்டும் என கோரி கடிதம் மூலம் மாகாண அவைத் தலைவர் சிவஞானத்திடம் ஒப்படைத்துள்ளார்.